தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் டிடிவி தினகரன் பேச்சு

தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் டிடிவி தினகரன் பேச்சு

மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு, தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என டிடிவி தினகரன் பேசினார்.

மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு, தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என டிடிவி தினகரன் பேசினார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியின் பாஜக கூட்டணி சார்பில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இன்று இரவு இவருக்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். தேரடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். பொது மக்கள் மத்தியில் டிடிவி தினகரன் பேசும் போது, பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் பதவியில் அமர்வதற்கு தென்காசியில் நீங்கள் வாக்களிக்க வேண்டிய வெற்றி சின்னம் தாமரை. இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி சிறந்த வல்லரசாக மாறுவதற்கு, மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, இந்தியாவின் பாதுகாப்புக்கு, தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஜான்பாண்டியனை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

Tags

Read MoreRead Less
Next Story