செட்டிக்குளம் தேர் திருவிழாவில் வாக்காளர் விழிப்புணர்வு
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் செட்டிக்குளம் தேர் திருவிழாவில் வாக்காளர் விழிப்புணர்வு.
பெரம்பலூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் செட்டிக்குளம் தேர் திருவிழாவில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கோவில் திருவிழாக்கள், நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறயின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தினந்தோறும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழிப்புணர்வு குறும்படங்களை சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Next Story