நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு!
வாக்காளர் விழிப்புணர்வு
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரியில் முதல் இளம் வாக்காளர்கள் மத்தியில் நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வருகிற ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையும், நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு மையமும் இணைந்து 'வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 'யினை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நாமக்கல் -சிறப்பு வட்டாட்சியர் (முத்திரைத்தாள்) பி. மாதேஸ்வரி மாணவிகள் மத்தியில் பேசுகையில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களில் முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பதன் மூலம் தங்களுக்குள்ள ஜனநாயக கடமை உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் உங்களது ஜனநாயக கடமையினை முழுமையாக நிறைவேற்றுவதோடு, உங்களது பெற்றோர் உறவினர்கள், அயலகத்தார், நண்பர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நாமக்கல் மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ உங்களது பங்களிப்பினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.இதில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவியர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story