தர்மபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி

தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஆகியன நடைபெற்றன.

தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி, நடைபெற்றது.தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி, துண்டு பிரசுரங்கள் வழங்கி 100% வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பேரணி திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் பத்ஹூ முகம்மது நசீர் தலைமையில் தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் ( எ) அண்ணாமலை மற்றும் சுகாதார அலுவலர் S. ராஜரத்தினம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியானது தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நான்கு ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையம் வழியாக தொழில் துறை அகல் வைப்பக வளாகத்தை சென்றடைந்தது.இதில் சுமார் 250 க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள்,கா. முருகேசன்,மாவட்ட வள பயிற்றுநர் G.பெருமாள் மற்றும் வட்டார இயக்க மேலாளர் கலைச்செல்வி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மபுரி நகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் செல்வி, தெரசா, காயத்ரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story