வாக்களர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மக்களவை பொது தேர்தல் முன்னிட்டு சுமார் 2000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விரல் மை நம் வலிமை என்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இன்று (3.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி ஹர்குன்ஜித்கௌர், தேர்தல் காவல் பார்வையாளர் திருமதி உஷா ராதா, தேர்தல் செலவின பார்வையாளர் திரு.அர்ஜூன் பேனர்ஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்ட ‘விரல்மை, நம்வலிமை” என்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 19.4.2024 (வெள்ளிக்கிழமை) அன்று மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குபதிவை உறுதி செய்திடும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று (3.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்ட ‘விரல்மை, நம்வலிமை” என்பதை வலியுறுத்தும் வகையில் வாக்களிக்கும் முத்திரையில் ஒரு சேர நின்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story