பேராவூரணியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

பேராவூரணியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 100 சதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 100 சதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 100 சதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தாசில்தார் தெய்வானை தலைமை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தாசில்தார் தெய்வானை தலைமை வகித்து பேசியது, நாட்டுக்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் 100 சதம் வாக்களித்து தேசத்திற்கே நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டும். ஒரு நிமிட நேரத்தில் நாம் வாக்களித்து வந்துவிடுகிறோம், ஆனால் வாக்களிப்பதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர்.

எனவே வாக்களிப்பது நமது கடமை என்ற உணர்வோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார் .தொடர்ந்து பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினார்கள்.நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் முருகேசன். விஏஓ பேராவூரணி சிவா, காலகம் சுஜித்ரா, கிராம உதவியாளர்கள் சக்திவேல், கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story