பூந்தமல்லி நகராட்சிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பூந்தமல்லி நகராட்சிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பூந்தமல்லி நகராட்சிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


பூந்தமல்லி நகராட்சிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

2024 மக்களவை தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று, திருவேற்காடு நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில், நான் ஒரு பெருமைக்குரிய வாக்காளர் என்ற பெயரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் குருசாமி, பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் நேர்மையான முறையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்ட் முன்பாக நின்று அதிகாரிகள், பொதுமக்கள், பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள் செல்பி எடுத்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதேபோல் பூந்தமல்லி நகராட்சி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மற்றும் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Tags

Next Story