அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம்.
இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் நாட்டுக்கான எனது முதல் வாக்கு என்ற பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் இந்திய உயர்கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அதன்படி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் தெற்கு தாசில்தார் செல்வராஜ், துணை தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிக்கும் முறைகள் குறித்தும் விளக்கி பேசினர். இதில் வருவாய் ஆய்வாளர்கள் தனலட்சுமி, ராஜவேல், கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் வாக்களிப்பது என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டதுடன், மாதிரி வாக்குச்சாவடி மைய கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. துறையை சேர்ந்த மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வாக்களிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துறையை சேர்ந்த மாணவர்கள் மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் அதிகாரிகளாக வழிநடத்தினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ஜெயபாலன், மெய் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர். இதற்கிடையே சேலம் புதிய பஸ் நிலையத்தில் நாட்டுக்கான எனது முதல் வாக்கு குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சேலம் தாசில்தார் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நடத்தப்பட்டது.

Tags

Next Story