திருவெறும்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

திருவெறும்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

விழிப்புணா்வு பேரணி

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவெறும்பூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மகளிா் வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் திருவெறும்பூா் கடைவீதியில் நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். பேரணியில் திரளான மாற்றுத்திறனாளிகள், மகளிா் கலந்து கொண்டு மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் 100 சதவீத வாக்குப்பதிவைச் செலுத்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மகளிா் வாழ்வாதார இயக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்கு செலுத்துவது என்பது குறித்து ஆட்சியா் செயல்விளக்கம் அளித்தாா். பின்னா் திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகம் முன், ஆட்சியா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிா் வாழ்வாதார இயக்க அலுவலா்கள், பொதுமக்கள் முன்னிலையில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

Tags

Next Story