விருதுநகரில் திருநங்கைகள் பங்கு பெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
பேரணியை தொடக்கி வைத்த ஆட்சியர்
விருதுநகர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாள்தோறும் 100 சதவிகித வாக்குப்பதிவு மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் திருநங்கைகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கருமாரி மடம் அருகே நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட திருநங்கை சாந்தினி கூறுகையில்,
திருநங்கைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேர்தல் விழிப்புணர்வு பேரணி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாகவும் வாக்களிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பையும் வைக்காமல் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிப்பது நமது உரிமை மற்றும் கடமை என்றார்.