முட்டம் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பம்

முட்டம் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பம்

முட்டம் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. 

முட்டம் கடற்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முட்டம் கடற்கரை பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் அமைக்கப்பட்டு

ள்ள மணற்சிற்பத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று (23.03.2023) நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து கூறுகையில்கையில்- இத்தேர்தல்களில் 18 வயது நிரம்பியர்வர்கள் அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று ”வாக்களிப்பது போல் ஏதுவும் இல்லை நான் உறுதியாக வாக்களிப்பேன்” என்ற தேர்தல் ஆணையத்தின் மையக்கருத்தினை வலியுறுத்தி, சுற்றுலாத் தளமான முட்டம் கடற்கரையில் சிறந்த கலை வல்லுநர்களை கொண்டு கடல் மணலால் உருவாக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பத்தினை பார்வையிடப்பட்டது.

இந்த மணற்சிற்பமானது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. மேலும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரிகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இது போன்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட சமந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, முட்டம் ஊராட்சி தலைவர் நிர்மலா ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story