வாக்காளர் விழிப்புணர்வு கையொப்ப இயக்கம்!

வாக்காளர் விழிப்புணர்வு கையொப்ப இயக்கம்!

கையொப்ப இயக்கம் 

நூறு சதவீதம் வாக்களிக்க அறிவுருத்தி வாக்காளர் விழிப்புணர்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வருவாய்த் துறை சார்பில் இளம் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க அறிவுருத்தி வாக்காளர் விழிப்புணர்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது. மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, திருமயம் சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் தலைமை வகித்தார். பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.சாந்தா,தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வே.அ. பழனியப்பன் வரவேற்றார். நிகழ்வில், நூறு சத வாக்களிப்பை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதையடுத்து மாணவ, மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து மேலைச்சிவபுரியில் வீடுகள்தோறும் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.செம்பூதி கிராமத்தில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியை திருமயம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story