அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம் 

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம். கலெக்டர் பிருந்தாதேவி பங்கேற்பு.
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் நடைபெற்றது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தயைும், மனித சங்கிலி நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் போது மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு கோஷமிட்டவாறு சென்றனர். தொடர்ந்து பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திட்ட அதிகாரி ரவிச்சந்திரன், வீரபாண்டி சட்டசபை தொகுதி தேர்தல் உதவி அதிகாரி முருகன், சேலம் தெற்கு தாசில்தார் செல்வராஜ், துணை தாசில்தார் ராஜேஸ்வரி, மக்கள் தொடர்பு அதிகாரி சுவாமிநாதன், வேம்படித்தாளம் வருவாய் ஆய்வாளர் ராஜவேல், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், டாக்டர் ஜெயபாலன், மெய்பிரபு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆலோசகர் ரஞ்சிதா, மோகன், டாக்டர் ஹரிஷ்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். .

Tags

Read MoreRead Less
Next Story