கலசபாக்கத்தில் வாக்காளர் முகாம்: பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆய்வு

கலசபாக்கத்தில் வாக்காளர் முகாம்: பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆய்வு
X

ஆய்வு பணியில் எம் எல் ஏ 

கலசபாக்கத்தில் நடந்த வாக்காளர் முகாமை பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் போன்ற சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமினை பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ ஆய்வு செய்து பேசியதாவது:- இந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள் இளம் பெண்கள் அனைவரும் தங்களின் படித்த சான்றிதழ் மற்றும் முகவரி ஆவணங்களை சேர்த்து வாக்காளர் படிவத்தில் புதிய உறுப்பினர் சேர்த்துக் கொள்ள வேண்டும் .அதேபோல் இந்த கிராமத்திலிருந்து மற்ற கிராமத்திற்கு திருமணம் ஆகி சென்றவர்களுக்கு முகவரி மாற்றி கொடுக்கவேண்டும்.

மேலும் பெயர்களில் பிழைகள் இருந்தால் பெயர் நீக்கி சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை நம் அனைவரும் பயன்படுத்தி நாம் அனைவரும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை பெற வேண்டும். சென்ற மாதம் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலசபாக்கம் வட்டத்தில் 3175 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 170 வாக்காளர்கள் பெயர் மாற்றம் 70 முகவரி மாற்றம் என 3415 படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டது. படிவம் 6 இல் 537 புதிய வாக்காளர்களும் படிவம் 7 இல் 71 வாக்காளர்களும் படிவம் 8 இல் 139 வாக்காளர்களும் மொத்தம் 747 புதிய மனுக்கள் கொடுத்து தங்கள் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளனர்.இந்த மனு வரும் ஜனவரி மாதம் கிராம நிர்வாக அலுவலர் மூலம் மற்றும் இணையதளம் மூலம் பதிவு செய்த வாக்காளர்களுக்கு தபால் துறை மூலமும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின்போது ததாசில்தார் ராஜராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரமேஷ், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story