வாக்காளர் சிறப்பு முகாம் - ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் 01.01.2024 ஐ தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் விதமாக 2 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் வாரணவாசி அரசு உயர்நிலைபள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா நேரில் ஆய்வு செய்தார். இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய வாக்காளராக சேர்வதற்கு ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். இதேபோல் வாரணவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, கீழப்பழூவூர் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைபள்ளி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வில் ஈடுபட்டார். இந்நிலையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடி மையங்களிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குசாவடி மையங்கள் என மொத்தமாக 596 வாக்குசாவடி மையங்களில் முகாம்கள் நடைப்பெற்றதாக தெரிவிக்கபட்டது. இந்த ஆய்வில் அரியலூர் கோட்டாச்சியர், வட்டாச்சியர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags
Next Story