வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம்: விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
விருதுநகர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் இன்று வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024-ஐ முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவருமான ஜெயசீலன் கள ஆய்வு மேற்கொண்டார்.
வாக்களர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024-ன் ஒரு பகுதியாக, 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலும். விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து புதிய வாக்காளராக பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ( படிவம் 6) - 26,020, வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்கள் (படிவம் 7) -2425 மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் (படிவம் 8) -13357, உட்பட மொத்தமாக 41803 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேற்படி, விண்ணபங்களின் மீது நடவடிக்கை மேற்கொளள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலானது 05.01.2024 அன்று வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.