வாக்காளர்கள் விழிப்புணர்வு நடைபயண பேரணி 

வாக்காளர்கள் விழிப்புணர்வு நடைபயண பேரணி 
விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
வாக்காளர்கள்  விழிப்புணர்வு நடைபயண பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்த இளம் வாக்களர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளும், சுய உதவிக்குழுவினருக்கு நடைபெற்ற ரங்கோலி கோலப் போட்டியில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஸ்ரீதர் இன்று துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கரநாராணயன், தேர்தல் தனி வட்டாசியர் சுசிலா, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், சுயஉதவிக்குழுக்கள், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story