பொதுமக்களுக்கு வாக்காளர் கையேடு !
வாக்காளர் கையேடு
மாநகராட்சி செயற்பொறியாளரும், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலருமான பழனிசாமி தலைமை தாங்கி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து அங்கு வந்த ஆண், பெண்களிடம் வாக்காளர் கையேட்டை வழங்கினார்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று சேலம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் கரகாட்டம், இசை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி செயற்பொறியாளரும், தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலருமான பழனிசாமி தலைமை தாங்கி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து அங்கு வந்த ஆண், பெண்களிடம் வாக்காளர் கையேட்டை வழங்கினார். இது குறித்து கண்காணிப்பு அலுவலர் பழனிசாமி கூறும் போது, ‘இது வரை கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாளை முதல் மாரத்தான், கார் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான வகையில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’ என்றார்.
Next Story