மாற்று திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு !
ஆலோசனைக் கூட்டம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க உள்ள மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளன்று வாக்கு ப்பதிவு செய்வது குறித்து மாற்றுத்திறனாளிகளுடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க உள்ள மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளன்று வாக்கு ப்பதிவு செய்வது குறித்து மாற்றுத்திறனாளிகளுடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1454 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளார்கள். இதில் 175 பேர் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும், மீதமுள்ள 1279 நபர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கே வருகைதந்து தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்கள் என்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
Next Story