வாக்களிப்பு விழிப்புணர்வு பலூன்

வாக்களிப்பு விழிப்புணர்வு பலூன்
தென்காசியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு பலூன் பறக்க விட்ட ஆட்சியர்
தென்காசியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு பலூன் பறக்க விட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகிய வற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று நடந்த தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் 100% நேர்மையாக வாக்களிப்போம், தேர்தல் நாள் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்விற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ. கே. கமல்கிஷோர் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூனை பறக்க விட்டார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா பிரியதர்ஷினி, தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஏ. ஆ. சிவக்குமார், இ. சாமத் துரை, ஆ. கலைச்செல்வி, டேவிட் ஜெயசிங், தென்காசி கோட்டாட்சியர் அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப் பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story