வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் 

வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் 

பிரச்சார வாகனம்

கன்னியாகுமரியில் வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ட்துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிராச்சாரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இன்று கொடியசைத்து துவக்கி வைத்து கூறியதாவது,

இன்று முதல் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் வாயிலாக ”தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணியினை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விழிப்புணர்வு பிராச்சார பயணம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து, நமது மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு பெற்ற மாவட்டமாக திகழ செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், தேர்தல் வட்டாட்சியர் வினோத், உசூர் மேலாளர் ஜுலியன் தாஸ், துணை தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story