தபால் மூலமாக மாணவ மாணவிகள்  விழிப்புணர்வு 

தபால் மூலமாக மாணவ மாணவிகள்  விழிப்புணர்வு 

விழிப்புணர்வு 

கன்னியாகுமரியில் மாணவிகளுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் களியக்காவிளை ஜெசிஐ சார்பில் இன்று (05.04.2024) நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பயோனியர் குமாரசாமி கல்லூரி மாணவ மாணவியர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தங்களுடைய பெற்றோர்களுக்கு தபால் மூலம் கடிதம் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி முன்னிலை வகித்தார். நான்காவது நாளான இன்று வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்பது நமது உரிமை என்பதை உணர்த்தும் வகையில் பயோனியர் குமாரசாமி கல்லூரி (வெட்டூர்ணிமடம்) மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை தபால் மூலமாக எழுதி உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி அவர்களிடமும் கொடுத்தனர்.

பின்பு அந்த தபால்கள் தபால்நிலைய கண்காணிப்பாளர் செந்தில் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவில் தபால் துறையை சேர்ந்த பல அதிகாரிகள் பங்கு கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story