வாக்களிப்பதன் அவசியம் குறித்து மினி மாராத்தான்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து மினி மாராத்தான்

மினி மராத்தான் 

திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மினி மாராத்தான் ஓட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நுழைவு வாயில் அருகில் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு விளையாட்டு துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மினி மாராத்தான் ஓட்டம் நடந்தது.

மினி மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (02.04.2024) கொடியசைத்து துவக்கி வைத்து, மாணவர்களுடன் மாராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

Tags

Next Story