மீன்வளக் கல்லூரி சார்பில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி

மீன்வளக் கல்லூரி சார்பில்  வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சார்பாக இன்று காலை நடைபெற்றது.

பேரணியை கல்லூரி முதல்வர் ப.அகிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது ஆசிரியர் காலனியில் ஆரம்பித்து பாளையங்கோட்டை மெயின் ரோடு வழியாக வந்து மில்லர்புரம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் சுமார் 200 பேர்கள் கலந்து கொண்டார்கள். இப்பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டு தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இப்பேரணியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் மற்றும் வாக்காளிக்கும் முறை பயிற்சி நோடல் ஆபிசர் சங்கரன் மற்றும் உதவி இயக்குநர் பஞ்சாயத்து உலகநாதன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகானந்தம் மற்றும்செயலர் ரோகன் ஆகியோர் இப்பேரணிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Next Story