மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி
வாக்களிப்பு பேரணி
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போது 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்பு ணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பழனி தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போது 100 சதவீதம் வாக்குப்ப திவு இலக்கை அடைந்திடும் வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களி டம் பல்வேறு துறைகளின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திற னாளிகளின் 3 சக்கர ஸ்கூட்டர் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நான்கு முனை சந்திப்பு வரை சென்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக வாக்களித்திடும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வுதள வசதி, 2 சக்கர நாற்காலிகள் மற்றும் உதவி புரிந்திடும் வகையில் ஒரு உதவியாளர் நிய மிக்கப்படவுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாய கடமையை நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story