நீலகிரி தொகுதியில் 10 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தயாரான போது சுமார் பத்து இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பணி செய்யவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக தயாராக வைத்திருந்த மற்ற இயதிரங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதன்படி ஊட்டி அடுத்த மஞ்சூர் அருகில் உள்ள கரியமலை சோதனை சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது. கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரத மாதா பள்ளி, பிங்கர் போஸ்ட் நிர்மலா பள்ளி, தேவாலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பட்டி பாரத் மாதா பள்ளியில் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது.
பைகமந்து வாக்குச்சாவடியில் பேட்டரி பிரச்சனையில் 89 வாக்குகள் பதிவான நிலையில் 8.20 மணிமுதல் வேலை செய்யவில்லை, இதன் பின்னர் மண்டல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேட்டரி மாற்றப்பட்டு இயதிரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. ....