வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறை- ஆட்சியர் ஆய்வு
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தலையொட்டி சென்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச.உமா ராசிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் சம்பந்தமான பல்வேறு அறிவுரைகளை வழங்கியும் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா தெரிவித்தார். இந்த ஆய்வுகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story