வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தேர்வு!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்றம் வாரியாக முதற்கட்ட ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்றம் வாரியாக முதற்கட்ட ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இன்று (01.04.2024), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தேர்தல் பொது பார்வையாளர் திருதிவேஷ் ஷெஹரா, மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை சட்டமன்றம் வாரியாக முதற்கட்ட ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்,ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்..
Next Story