வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வைக்கப்பட்டு சீல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வைக்கப்பட்டு சீல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைப்பறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட தேர்தல் நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் நேற்று இரவு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் இடப்பட்டு வாக்கு என்னும் மையமும் , வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையுமான திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் , மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் வைப்பறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 282 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் வைப்பறைகளுக்கு முன்னாள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு காவல் துறை உள்ளிட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட பகுதி வரை அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story