வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து 'சீல்'
வாக்குப்பதிவு எந்திரங்கள்
இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசன், வானூர் தாசில்தார் நாராயணமூர்த்தி, வாக்குச்சாவடி அதிகாரி சங்கரலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தாலுகா அலுவலக முதல் மாடியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வானூர் சட்டமன்ற தொகுதியில் 278 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதற்காக 330 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வி.வி. பாட் ஆகியவை 2 லாரிகள் மூலம் வானூர் தாலுகா அலுவல கத்துக்கு கொண்டு வரப்பட்டது. இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசன், வானூர் தாசில்தார் நாராயணமூர்த்தி, வாக்குச்சாவடி அதிகாரி சங்கரலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தாலுகா அலுவலக முதல் மாடியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீ சார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதிக்கு முன் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தி, தேர்தலுக்கு முதல்நாள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Next Story