வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.
நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற தேர்தலையொட்டி சங்ககிரி சட்டமன்ற தொகுதி 311 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள 1128 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 376 வாக்குபதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள், 407 (விவிபேட்) மேலும் தேர்தல் வாக்குப்பதிவின் போது தேவைப்படும் உபகரணங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணிகளை நாமக்கல் உதவி தேர்தல் அலுவலரும் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான லோகநாயகி, சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி ஆகியோர் பார்வையிட்டனர்.
Next Story