வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குபதிவு  இயந்திரங்கள்

வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு 

மேட்டூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள,மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் 316 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 25-ல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 382 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்,413 வி.வி.பேட் கொண்டு வரப்பட்டு மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை வாக்கு பதிவு நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சார் ஆட்சியர் பொன்மணி முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட பள்ளியின் அறை திறக்கப்பட்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் , கண்ட்ரோல் யூனட், விவி,பேட் ஆதியவை வாக்குசாவடி மையங்களுக்கு வாகன மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியில் மேட்டூர் வட்டாச்சியர் விஜி, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் வருவாய் துறை, காவல் துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story