விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 331 மூட்டை தானியங்கள்

விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 331 மூட்டை  தானியங்கள்

தானிய மூட்டைகள் 

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று ஒரே நாளில் 331 மூட்டை நெல், மணிலா, கம்பு,உளுந்து உள்ளிட்ட பருப்பு, தானியங்கள் விற்பனைக்கு வந்தன.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மணிலா வரத்து 55 மூட்டை, எள் வரத்து 3 மூட்டை, நெல் வரத்து 230 மூட்டை, உளுந்து வரத்து 10 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 3 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 26 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 4 மூட்டை என மொத்தம் 331 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Tags

Next Story