விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான.

திருமாவளவன் ஆணைக்கிணங்க திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட செயலாளர்.A.P.R.மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ஆளும் அரசு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story