கழுகுகள் கணக்கெடுப்பு பணி
ஆலங்குளத்தில் கழுகுகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
ஆலங்குளத்தில் கழுகுகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கழுகுகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாறு கழுகுகள் எனப்படும் பிணந்தின்னி கழுகுகள், இறந்த விலங்குகளைத் தின்று காட்டிலுள்ள விலங்குகளையும், நம்மையும் காத்து வருகின்றன. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் 9 வகையான பாறு கழுகுகள் உள்ளன. தமிழ்நாட்டில் வெண் முதுகு கழுகுகள், சிவப்புத் தலை கழுகுகள், இந்திய வகை கழுகுகள், எகிப்திய கழுகுகள் உள்ளன . இதில் எகிப்திய கழுகுகளை தவிர மற்ற மூன்று வகை கழுகுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. இந்நிலையில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென் இந்தியாவின் ஒருங்கிணைந்த பாறு கழுகுகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆலங்குளம் வனப் பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்புப் பணியில் வனகாப்பாளா்கள் சுதா, டென்சிங் மற்றும் வன ஊழியா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
Next Story