தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்!
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
விளாத்திகுளத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வாரிசு அடிப்படையில் மீண்டும் வேலை வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் எரிபொருள் படி ரூ.2500 வழங்க வேண்டும், பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கி
ராம உதவியாளர்கள் சங்க வட்டத் தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகராஜ் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் சாலமன், வட்டபொருளாளர் சண்முக ராமநாதன், உட்பட விளாத்திகுளம் வட்ட கிராம உதவியாளர்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story