வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்!
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
தூத்துக்குடியில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
தூத்துக்குடியில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வாரிசு அடிப்படையில் மீண்டும் வேலை வழங்க வேண்டும், பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போ
ராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் கிராமஊழியர் சங்கம் மாநிலசெயலாளர் விஜயமூர்த்தி, மாவட்டசெயலாளர் கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குமாரலிங்கம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் கார்த்திக், வட்ட பொருளாளர் ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story