நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் - கொட்டும் மழையில் நடைபயிற்சி

X
கொட்டும் மழையில் நடை பயிற்சி
நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த நடைபயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தபடியே நடந்து சென்றனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் நடைபயிற்சி முகாமை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் அருள்நம்பி முன்னிலை வகித்தார். நடைபயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அகல்யா, டாக்டர் ஜெயராஜ், டாக்டர் புவனேஸ்வரி அடங்கிய குழுவினர் மருத்துவ ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா, பரந்துார் ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் அடங்கிய குழுவினர், துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் வழிகாட்டுதல்படி செய்திருந்தனர்.
Next Story
