நித்திரவிளையில் நடந்து சென்று மூதாட்டியின் செயின் பறிப்பு .

நித்திரவிளையில் நடந்து சென்று மூதாட்டியின் செயின் பறிப்பு .
பைல் படம்
நித்திரவிளையில் நடந்து சென்று மூதாட்டியின் செயின் பறித்தவற்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் போஸ்க் என்பவர் மனைவி மரியபுரோஸ் (76). இன்று காலை சுமார் 6 மணி அளவில் வீட்டில் சேகரித்த குப்பையை அந்தப் பகுதியில் கொட்டுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மூதாட்டியின் பின்னால் நடந்து சென்ற நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தாலிச் செயினை பறித்து உள்ளார். ஆனால் மூதாட்டி செயினை கட்டியாக பிடித்துக்கொண்டதில், செயின் லாக்கட் மட்டும் மூதாட்டியிடம் சிக்கியது. அந்த நபர் கிடைத்த இரண்டு பவுன் செயினுடன் அந்த பகுதியில் இருந்து ஓடி விட்டார். சிறிது நேரத்தில் மூதாட்டி பரபரப்பாக நின்றதை பார்த்த உறவினர் ஒருவர், மூதாட்டியிடம் விசாரித்தபோது, பயத்தில் உறைந்து போன மூதாட்டியால் பேச முடியவில்லை

. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மூதாட்டி இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் நடந்து வந்து மூதாட்டின் கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story