கருங்கல்லில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள்

கருங்கல்லில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள்
சுற்றுச்சுவர் அமைக்கும் பணி
கருங்கல்லில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு, 86 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. அதற்கு சொந்தமாக, அப்பகுதியில் நிலம் உள்ளது. அந்நிலத்தில், இந்திய பாதுகாப்புத் துறை, கடந்த 2018ல் ராணுவ கண்காட்சி நடத்தியது. கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அன்றைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ உயரதிகாரிகள், தனித்தனி ஹெலிகாப்டரில் இங்கு வந்து திரும்பினர். இதையடுத்து, நான்கு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வகையில், 'ஹெலிபேட்' தளமும், கோவில் இடத்தில் அமைக்கப்பட்டது. 'ஹெலிபேட்' தளம், கண்காட்சிக்கு பின் பயனின்றி வீணாகிறது. மதுப்பிரியர்கள் மது அருந்த இப்பகுதியில் குவிகின்றனர். ஹெலிபேடு தளம் உள்ள பகுதி, எட்டு ஏக்கர் உள்ள நிலையில், அதை வான்வழி சுற்றுலாவிற்கு பயன்படுத்துவது குறித்து, புகார் எழுந்தது. இதையடுத்து, சுற்றுலாத் துறையின் வேண்டுகோளிற்காக, ஹெலிபேட் தள பகுதியில் சுற்றுச்சுவர், கழிப்பறை அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. கோவில் நிலத்தை ஒட்டி, வடக்கிலும், மேற்கிலும், தனியார் இடத்திற்கான சுற்றுச்சுவர் உள்ளது. எனவே, கிழக்கு, தெற்கில் மட்டும், கருங்கல்லில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Tags

Next Story