சுவர் பிரச்னை... மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுவர் பிரச்னை... மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேவூர் அருகே எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஒரு தரப்பினரும், அது விவசாய நிலத்திற்கான பாதுகாப்பு சுவர் என மறு தரப்பினரும் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

சேவூர் அருகே எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை அகற்றக்கோரி ஒரு தரப்பினரும், அது விவசாய நிலத்திற்கான பாதுகாப்பு சுவர் என மறு தரப்பினரும் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே குடியிருப்புக்கு மத்தியில் எழுப்பப்பட்ட சுவர் தீண்டாமை சுவர் எனவும் அதனை அகற்ற கோரி ஒரு சமூகத்தினரும் - அது தீண்டாமை சுவர் அல்ல விவசாய நிலத்திற்கான பாதுகாப்பு சுவர் என மறுதரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே கைகாட்டி என்னும் இடத்தில் விஐபி நகர் மற்றும் தேவேந்திரன் நகர் ஆகிய இரண்டு குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இதில் வெவ்வேறு சமூகத்தினர் வசித்து வரக்கூடிய நிலையில் விஐபி நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்பு கருதி 380 மீட்டர் தூரத்திற்கு தனக்கு பாத்தியப்பட்ட இடத்தில் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாகவும் , ஆனால் அதனை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தீண்டாமை சுவர் என பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் இதன் காரணமாக தங்கள் பகுதியைச் சார்ந்தவர்களின் குடும்பத்தினர மன உளைச்சல் அடைவதாகவும் , மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் பகுதியில் குடியிருந்த வருகின்ற நிலையில் தங்கள் குடியிருப்போர் நலச் சங்கத்திலும் அவர்கள் பொறுப்புகளில் பதவி வைத்து வருவதாகவும் ஆனால் சிலர் சுயநலத்திற்காக அதனை தீண்டாமை சுவர் என பரப்பி வருவதாகவும் , அரசு அதிகாரிகளும் தீண்டாமை சுவரையற்ற வார்த்தையை பயன்படுத்துவதாகவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் இறுதி முடிவுக்கு கட்டுப்பட இருப்பதாகவும் , அதுவரை தாங்கள் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு சுவரை தீண்டாமை சுவர் என பெயரிடக் கூடாது எனவும் , அவ்வாறு அழைக்கும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் , விஐபி நகர் பகுதியைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளர் உட்பட பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதேநிலையில் தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் விஐபி நகர் பகுதி வழியே செல்லக்கூடாது என்பதற்காக சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாகவும் , ஏற்கனவே இதை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் , தொடர்ந்து சுவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் தங்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாகவும் என் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேவேந்திரன் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளித்தனர்.

Tags

Next Story