தக்கலை : பெயிண்டரை அறிவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டவர் கைது

X
முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தேடப்பட்டு வந்தவரை கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூனிமாவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (44). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மது அருந்து பழக்கம் இருந்தது. இவருடன் அதே பகுதியை சேர்ந்த ஜோனி, அஜின், கெவின் ஆகிய மூன்று வாலிபர்கள் மது அருந்தி உள்ளனர். இதனை சதீஷின் மனைவி கண்டித்துள்ளார். இந்த முன் விரோதத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி ஜோனி உட்பட 3 பேரும் சேர்ந்து சதீஷின் வீட்டிற்குள் புகுந்து, பொருட்களை சேதப்படுத்தி, சதீஷை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சதீஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனி, அஜின் ஆகியோரை கைது செய்தனர். கெவின் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு கைது செய்தனர்.
Tags
Next Story
