திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வார் ரூம் திறப்பு

திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வார் ரூம் திறப்பு
X
 வார் ரூம் திறப்பு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மக்களவை தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட வார் ரூமை என்.ஆர்.இளங்கோ எம்.பி திறந்து வைத்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வார் ரூம் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவில் மாநில திமுக சட்டத்துறை செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் சு. தங்கராஜ் பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில சட்டத்துறை துணை செயலாளர் பச்சையப்பன், தலைமைக் கழக வழக்கறிஞர் சரவணன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வழக்கறிஞர்கள் சிதம்பரம், ஒன்றிய கழக செயலாளர் கள் தென்காசி மேற்கு வல்லம் திவான்ஒலி, செங்கோட்டை நகர திமுக செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story