குடகனாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பியுள்ள நிலையில், உபரி நீர் குடகனாற்றில் செல்வதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பியுள்ள நிலையில், உபரி நீர் குடகனாற்றில் செல்வதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்கிறது. உபரி நீர் குடகனாற்றில் செல்வதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொடைக்கானல் மலையடி வாரம் ஆத்தூர் அருகேயுள்ளது திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்த் தேக்கம். இதன் மொத்த உயரம் 23.5 அடி. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், ஆத்தூர் நீர்த் தேக்கத்துக்கு நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, ஆத்தூர் நீர்த் தேக்கம் நேற்று அதன் முழுக் கொள்ளளவான 23.5 அடியை எட்டி மறுகால் பாய்கிறது. இதனால், குடகனாறு ஆற்றின் கரையோர கிராமங்கள் எச்சரிக்கையுடன் இருக்க, பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story