மேல்நிலை தொட்டியில் இருந்து வீணாகும் நீர்.நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

X
வீணாகும் நீர்
கோவை:மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 வார்டுகள் உள்ள நிலையில் தினமும் மக்கள் பயன்பாட்டிற்கு உப்பு தண்ணீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது.காலை,மாலை என இரு நேரம் மேல்நிலை தொட்டியில் தண்னீர் நிரப்பபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யபடுகிறது.இதில் ராமநாதபுரம் 64வது வார்டுக்கு உட்பட்ட தாமரை பெரியநாயகம் வீதியில் 10000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மாநகராட்சி சார்பில் வைக்கபட்டுள்ளது.80 குடியிருப்பு உள்ள இந்த பகுதிக்கு தினமும் காலை மற்றும் மாலை தண்னீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் மேல்நிலை தொட்டி பழுதடைந்து நீர் வீணாவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் மாநகராட்சி சார்பில் தண்னீர் விநியோகம் செய்யபடும் நிலையில் மேல்நிலை தொட்டி பழுதடைந்து தண்னீர் வீணாவது குறித்து பலமுறை புகார் அளிக்கபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என வேதனை தெரிவித்தனர்.மேல்நிலை தொட்டி நிரம்பி தண்ணீர் சாக்கடை கால்வாயில் சென்று வீணாவதாகவும் இதற்கு மேல்நிலை தொட்டியை மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
Tags
Next Story
