வாகனம் மோதி காவலாளி பலி!
காவல்துறை விசாரணை
அண்ணா பல்கலைக் கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த காவலாளி பலி.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனுாரை அடுத்த தவளைமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. அண்ணா பல்கலைக் கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி புதுக்கோட்டை சாலையில் பஸ்சுக்காக நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சுப்பையா அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story