குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.


கோவையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை பாரதி பார்க் சாலையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தனிகை பொறியாளர் அலுவலகம் முன் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மண்டல அளவில் நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பிரான்சிஸ் தலைமை வகித்தார்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் ஆர். சரவணன் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட செயலாளர் எஸ்.சி. பிரகாசம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் உமாசங்கர், கரூர் மாவட்ட செயலாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை வங்கிக் கணக்கில் வழங்குதல்,சட்டப்படியான இ.எஸ்.ஐ,பி.எப்,குரூப் இன்சூரன்ஸ் முறையாக வழங்குதல்,பராமரிப்பு பணியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடுதல், தொழிலாளர் நலன் சார்ந்த விவகாரங்களில் நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் உடனடியாக அமல்படுத்திடுதல், உள்ளிட்ட 5 கோரிக்கைகளை தமிழக அரசும் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகமும் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story