சென்னை ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3064 மில்லியன் கன அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில் 3064 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரி தனது முழு கொள்ளவான 3300 மில்லியன் கன அடியில் 2331 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி தனது முழு கொள்ளவான 3231 மில்லியன் கன அடியில் 2510 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.

வீராணம் ஏரி தனது முழு கொள்ளவான 1465 மில்லியன் கன அடியில் 13 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரி தனது முழு கொள்ளவான 1081 மில்லியன் கன அடியில் 751 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி தனது முழு கொள்ளவான 500 மில்லியன் கன அடியில் 472 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story