தூர்வாரப்படாத வாய்காலால் பெரிய குட்டைக்கு தண்ணீர் பாதிப்பு

சின்னமணலியில் உள்ள பெரியகுட்டைக்கு செல்லும் வாய்கால் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், மழைபெய்தும் வற்றியே கிடக்கிறது.

எலச்சிபாளையம் யூனியன், சின்னமணலி கிராமத்திற்கு உட்பட்ட, சேர்வாம்பட்டி பகுதியில், சுமார் 5ஏக்கர் நிலப்பரப்பில், பெரியகுட்டை எனும் பெயரில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்தகுளத்திற்கு, சின்னமணலி ஊர்குட்டையில் இருந்து நீர்வழிப்பாதையான வாய்க்காலின் வழியாக, பெரியகுளத்திற்கு பலவருடங்களாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த வாய்கால் சுமார் 15அடி முதல் 22அடி அகலம் கொண்டது.

எனவே, கடந்த பலவருடங்களாக இந்த வாய்க்காலை சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவிற்கு தூர்வாராப்படாமல், ஆங்காகே ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குறிப்பாக இப்பகுதியில் கடந்தசில தினங்களாக 5செ.மீட்டர் முதல் 2செ.மீட்டர் வரையில் மழைபெய்தும் வாய்கால் தூர்வாரப்படாத காரணத்தினாலும், ஆக்கிரமிப்பு காரணத்தினாலும் குளத்தில் ஒருசொட்டு தண்ணீர்கூட இல்லாமல் வற்றி காணப்படுகின்றது. மேலும், இப்பகுதியில் பெய்த கோடைமழை வாய்காலில் செல்ல வழியில்லாமல், அருகிலுள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து, ஒரு விவசாய கிணற்றுக்கு போடப்பட்டிருந்த வேலியை உடைத்து கிணற்றுக்குள் இருந்த தண்ணீர் எடுத்துவிடும் மோட்டார் மண்ணால் மூடிவிட்டது. இதுஅந்த விவசாயிக்கு பேரிழப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தேவையான அளவு மழைப்பொழிவு இருந்தும் 5ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுட்டையில் போதிய தண்ணீரின்றி வற்றி காணப்படுவதால், சுற்றியுள்ள பலநூறு ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தூர்வாரப்படாத வாய்க்கால், வாய்க்கால் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இதுசம்மந்தமாக, மக்கள் பலமுறை கலெக்டர் அலுவலகத்திலும், ஆர்.டி.ஓ.,விடமும் மனு அளித்திருந்தும் இதுவரயைில் எவ்வித நடவடிக்கையும் இல்லையென விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதிகாரிகள் விரைந்து ஆய்வுமேற்கொண்டு வாய்க்காலை தூர்வாரவும், ஆக்கிரமிப்பை அகற்றியும் பெரியகுட்டைக்கு நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story