ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடும் சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடும் சரிவு

நீர்வரத்து குறைவு

தர்மபுரி மாவட்டம்,ஓகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளது தற்போது வினாடிக்கு 300 கன அடியாக இருந்து வருகிறது. இதனை அடுத்து ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காய்ந்து காணப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு சரிந்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று வரை வினாடிக்கு 400 கன அடி நடையில் இன்று காலை நிலவரப்படி 300 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே பாறைகளாக காய்ந்து காட்சியளிப்பதால் சினி ஃபால்ஸ்,ஐந்தருவி மெயின் அருவி,உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பரித்துக் கொண்டு சென்று நீரின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வெயில் வெம்மையை தணிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர் .

Tags

Next Story